நாட்டின் தற்போதைய பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டின் பொருளாதாரம் 2018 இல் இருந்த நிலைக்குத் திரும்ப இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
வருடாந்த பொருளாதார மீளாய்வு
2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு தொடர்பான விரிவுரை நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னைய ஆண்களுடன் ஒப்பிடும் போது தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு
இருப்பினும் பழைய நிலைக்கு நாட்டின் பொருளாதாரம் திரும்புவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தேவைப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
