பொருட்களின் விலை மிக அதிகம்! தான் அறிந்ததை வெளிப்படுத்தும் துமிந்த
பொருட்களின் விலைகள் அதிகம் என்பதை நாம் அறிவோம். எனினும் எமது முதலாவது போராட்டமாக இருந்தது வரிசைகளை இல்லாமலாக்குவதாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க(Dumintha Dissanayakke) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலை குற்றம் சுமத்துவதில் பலனில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியைப் போன்று யார் நாட்டைப் பொறுப்பேற்றாலும் இதைத்தான் செய்யவேண்டும். அநுரகுமார திசாநாயக்க(Anurakumara Dissanayakke) நாட்டைப் பொறுப்பேற்றாலும் இதைத்தான் செய்யவேண்டும். முதலில் செய்யவேண்டியது மக்கள் மூச்சுவிட இடமளிக்க வேண்டும்.
அதற்கு ரணில் விக்ரமசிங்கவைப்(Ranil Wickremesinghe) போன்று எவரையும் குற்றம் சுமத்துவதில் பலனில்லை.
இன்று ஆளும், எதிர்க்கட்சி பேதங்களின்றி இந்த வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது மிகச் சிரமமாகும். பொருட்களின் விலைகள் அதிகம் என்பதை நாம் அறிவோம்.
எனினும் எமது முதலாவது போராட்டமாக இருந்தது வரிசைகளை இல்லாமலாக்குவதாகும்.
இன்று அவர் அரசியல் கட்சிகளுடன் ஒரு வேலைத்திட்டத்துடன் பேசி அதனை முன்வைத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாமும் சிந்திக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
