ஜனாதிபதி பதவியில் நீடிக்க ரணிலுக்கு கால அவகாசம்
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக நீடிக்க நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் பணிகள் முழுமையடையவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை. அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைத்து, இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவருக்கு மீண்டும் வர காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் அரசியலமைப்பை மாற்ற முடியாத காரணத்தினால், தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் ஒரு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இது தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும். அநுரகுமார திஸாநாயக்க 'திருடர் திருடர்' எனப் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர பொருளாதார மறுசீரமைப்புக்களை கொண்டு வரமாட்டார்.
ஆனால் அதைவிட தகுதியானவர் யாராவது இருந்தால் எனக்குக் காட்டுங்கள். தற்போதைய ஜனாதிபதி நாட்டுக்காகப் பல விடயங்களைச் செய்துள்ளபோதும் இந்தப் பணிகள் அனைத்தும் பூரணமாக முடிவுக்கு வரவில்லை. இதற்கு நாம் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
