வெளிநாட்டுக் கடன்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை செலுத்த முடியாது என்று அரசாங்கம் முதல் முறையாக அறிவித்தது. நாங்கள் கடனை செலுத்தவில்லை, வெளிநாடுகளின் கடனையும் சர்வதேச பத்திரங்களின் கடனையும் மட்டுமே செலுத்தினோம் என ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார்.
அப்போதிருந்து, நாங்கள் உள்நாட்டு கடன்களையும் முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களையும் தொடர்ந்து செலுத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செலுத்தப்படாத தனியார் கடன்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அவற்றில் பெரும்பாலான வெளி நாடுகளில் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் தனியார் கடன்கள் இன்னும் செலுத்தப்படவில்லை. இருப்பினும், தனியார் கடனை செலுத்த முடியவில்லை என்பதை வங்குரோத்து நிலையாகவே கருத வேண்டும்.
கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் இந்த நிலை ஏற்பட்டதில்லை. எனவே, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கையின் பொருளாதார சமூக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆண்டு மற்றும் திகதியென குறிப்பிடப்படும்.
இதன்போது நாடாளுமன்றமும் மக்களும் இந்த நிலையில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது ஒன்றே செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அந்த அதிகாரிகள் அப்போது இலங்கைக்கு வரவே அஞ்சினார்கள்.
ஐஎம்எப்பின் இணக்கம்
ZOOM தொழில்நுட்பத்தின் வாயிலாகவே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மிகவும் கடினமான பயணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனையுடன் கூடிய இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது.
4 வருட காலத்திற்கு 3 பில்லியன் டொலர் உடன்படிக்கைக்கு வந்துள்ள போதிலும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதுள்ளதாக அறிவித்துள்ளதால் அதனை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை திருப்பிச் செலுத்தும் முறைமை தொடர்பில் இணக்கப்பாட்டினை எட்டுமாறு வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, இரண்டு சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலுடன் 7 மாதப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் இணக்கப்பாட்டை பெற்றோம்.
அதனால் பாரிய தொகை கிடைக்காவிட்டாலும், இலங்கையில் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |