இலங்கையின் நிலை மேலும் மோசமடையும்:விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகமான மக்கள் உணவுப் பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் உணவு உண்பதை விட்டு விலகிச் செல்வதாகவும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,