கடும் பொருளாதார நெருக்கடி: வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள பேக்கரி உரிமையாளர்கள் (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை.
பேக்கரி உற்பத்தி மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பாமொயில் போன்ற மூலப்பொருட்களிற்கு தட்டுப்பாடு காரணமாகவும் பேக்கரி உற்பத்திகள் பெரிதும் பாதிப்படைந்தன.
தற்போதைய சூழ்நிலையில் பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வதே சவாலாக மாறியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களும், ஊழியர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பேக்கரிகள் மூடப்படுவதால் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பேக்கரி உரிமையாளர்களினதும் அத் தொழிலையே நம்பி வாழும் ஊழியர்களினதும் குரல்களை பதிவு செய்கிறது எமது லங்காசிறி,