இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டம்: தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்
இலங்கையின் டிஜிட்டல்(எண்மான) தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கான சர்ச்சைக்குரிய கேள்விப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு, ஏலத்தை சமர்ப்பித்த இரண்டு இந்திய நிறுவனங்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளது.
இதனையடுத்து கேள்விப்பத்திரங்கள் மீண்டும் வெளியிடப்படும் என்று இலங்கையின் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய திட்டத்தின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடும் இந்திய-இலங்கை கூட்டு திட்ட கண்காணிப்பு குழு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வரும் வாரத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை மனுக்களை சமர்ப்பித்த நிறுவனங்கள்
இந்தக் கூட்டுக்குழுவில் இராஜாங்க அமைச்சர் ஹேரத் மற்றும் இலங்கையில் இருந்து வெளியேறும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இணைத்தலைவர்களாக செயற்படுகின்றனர்.
உத்தியோகபூர்வமாக இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் என, இது அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய அரசாங்க மானியத்தின் மூலம் ஓரளவு நிதியளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மொத்தச் செலவு 41.05 பில்லியன் ரூபாய்களாகும். இதில் இந்திய அரசாங்கம் 450 மில்லியன் இந்திய ரூபாயை (ரூ. 1.75 பில்லியன்) முன்பணமாக வழங்கியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்திய நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை ஏலம் எடுக்க தகுதியுடையவையாகும். இந்திய நிறுவனங்களான மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் (எம்எஸ்பி) மற்றும் புரோட்டீன் டெக்னொலஜிஸ் ஆகியவை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2 காலக்கெடுவுக்கு முன்னதாக டெண்டர் ஏலங்களைச் சமர்ப்பித்திருந்தன.
முன்னதாக ஏழு நிறுவனங்கள் விலைமனு ஆவணங்களைப் பெற்றிருந்தாலும், ஆகஸ்ட் 2 காலக்கெடுவிற்குள் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
காலக்கெடுவை சுருக்கி நீடிக்கும் முடிவு, முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்களை மட்டுமே ஏலம் சமர்ப்பிக்க அனுமதிக்கும் முயற்சியா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரை காலக்கெடுவை நீடித்திருந்தால் இன்னும் பல நிறுவனங்கள் விலைமனுவைச் சமர்ப்பித்திருக்கும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
