பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களில் தானசாலைகள்
2025 பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) விசேட வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளார்.
தானசாலைகள் ஏற்பாடு
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, கொழும்பில் 944, கம்பஹாவில் 1792, களுத்துறையில் 977, கண்டியில் 1264, மாத்தளையில் 812, நுவரெலியாவில் 352, காலியில் 1186, மாத்தறையில் 1021, அம்பாந்தோட்டையில் 533, யாழ்ப்பாணத்தில் 03, கிளிநொச்சியில் 03, முல்லைத்தீவில் 17, வவுனியாவில் 21, மன்னாரில் 02, மட்டக்களப்பில் 09, அம்பாறையில் 584, கல்முனையில் 14, திருகோணமலையில் 152, குருணாகலையில் 2114, புத்தளத்தில் 731, அனுராதபுரத்தில் 2301, பொலன்னறுவையில் 650, பதுளையில் 968, மொனராகலையில் 716, இரத்தினபுரியில் 1097 மற்றும் கேகாலையில் 922 என நாடு முழுவதும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பில், கடந்த 2025 மே 6ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வழிகாட்டுதல் தொடர் வெளியிடப்பட்டது.
வழிகாட்டல்
இந்த வழிகாட்டுதல்களில், சுகாதார அதிகாரிகளுடன் தானசாலைகளை பதிவு செய்தல், பொது சுகாதார பரிசோதகர்களால் தகவல்களை சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகள், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவு அகற்றல், உணவு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
