யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையருகே குவிக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிஸார்
யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பொசன் போயா தினமான இன்றையதினமும்(10) அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் குவிப்பு
இந்தநிலையில் இன்று காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும் (10) நாளை மறுதினமும் (11) போராட்டம் செய்ய வேண்டாம் என்று நேற்றையதினம்(9) நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
