இலங்கை மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வெறுமையாக காட்சியளிக்கும் மீன் சந்தை
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தமது வியாபாரமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட மீன் சந்தை வளாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன் சந்தையை பார்வையிட்டபோது, அப்பகுதியில் மீன்களின் வருகை குறைந்து வெறிச்சோடிய நிலையில் காட்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெறிச்சோடி காணப்படும் சந்தைகள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீன் சந்தைக்கு வரும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதாகவும் மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, மீன்களின் விலைகள் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளது.
மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்
பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போது குறைந்த அளவே மீன்களை வாங்குவதாகவும், இதனால் தாங்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் மையத்திற்கு வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 35 விநாடிகள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
