காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் நடந்த பயங்கரம்
ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் சந்தேகம்
மதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய எஸ்.சதுரிகா என்ற யுவதி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை 24 வயதுடைய ஆர்.குமாரசிறி என்ற இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
