மட்டக்களப்பில் அடுத்தடுத்து மூன்று பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட விளம்பர பலகையில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் இன்றையதினம்(2.1.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (01-01-2026) இரவு -700 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
விசாரணை
அத்தோடு, அதே பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில் 22 வயதுடைய நபரொருவரும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரு சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றையதினம்(1.1.2026) இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri