இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் படைத்துள்ள வரலாற்றுச் சாதனை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதிகூடிய மருந்து உற்பத்தியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்ய குறித்த கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன் அந்த மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
சாதனை
வரலாற்றில் முதல் முறையாக, மருத்துவ வழங்கல் பிரிவினால் வழங்கப்பட்ட அனைத்து முன்பதிவுகளையும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டில் 05 புதிய வகை மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரம் 2025 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri