வெளிநாடொன்றில் இலங்கையருக்கு பெண் செய்த மோசமான செயல் - 59000 டொலர்களை வழங்குமாறு உத்தரவு
நியூசிலாந்தில் இலங்கை தொழிலாளரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அந்நாட்டு பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையரிடம் சட்டவிரோதமான முறையில் ஆயிரக்கணக்கான டொலர்களை பெற்று, அவரைத் துன்புறுத்திய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்நாட்டு நிறுவனம் ஒன்றின் பெண் பணிப்பாளர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
நியூசிலாந்து குடிவரவு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் அலுவலக முகாமையாளராக பணியாற்றிய போது, சட்டவிரோதமாக பணத்தை செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அப்பெண் பணிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போதிலும், அதனை 12 மாத வீட்டுக்காவலாக மாற்றியுள்ளது.
அதிகாரிகளிடம் முறைப்பாடு
அத்துடன் இலங்கை தொழிலாளருக்கு வழங்கப்படாத சம்பளம், வரிப் பங்களிப்புகள் மற்றும் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணம் உட்பட மொத்தம் 59,657.68 நியூசிலாந்து டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பணியிடங்களில் தங்களின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில், உடனடியாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு நியூசிலாந்து குடிவரவு அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam