புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
QR குறியீடு மூலம் பதிவிறக்கம்
குறித்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய குழாம் அறிவிப்பு, செய்திகள் போன்றவற்றை இரசிகர்கள் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மேலும், செயலியை QR குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
செயலியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்தி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
https://srilankacricket.lk/mobile-app
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |