படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி - வருத்தம் தெரிவித்த ஹசரங்க
ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க,
வீரர்கள் சரியாக விளையாடாததால் இந்த ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலக நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் முனையம்
அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் வருத்தமாக உள்ளதென ஹசரங்க தெரிவித்துள்ளார்.
“வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, எனவே துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை,” என அவர் கூறினார்.
இதேவேளை, பொதுவாக சாதாரண பயணிகள் முனையம் வழியாக வெளியேறுவது வழமை.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக பணம் செலுத்தி வசதி செய்ய வேண்டிய “சில்க் ரூட்” எனப்படும் முனையம் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.