கஞ்சா உற்பத்தியில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! டயானா கமகே வெளியிட்ட தகவல்
கஞ்சா உற்பத்தியில் இலங்கை உலகளவில் முதனிலை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 22 வகையான கஞ்சா வகைகள் காணப்படுவதாகவும், அவற்றின் ஊடாக பல்வேறு முக்கிய மருந்துப் பொருட்களை தயாரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கஞ்சா செடிகளை வெறும் போதை தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை எனவும், பல்வேறு மருத்துவ குணங்கள் இந்த செடியில் காணப்படுவதாகவும் கூறியுள்ளாள்ளார்.
மேலும், பத்து ஏக்கர் கஞ்சா செய்கையின் ஊடாக 200 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட முடியும் எனவும்,உரிய ஒழுங்குபடுத்தல்களுடன் போதைப் பொருள் தேவைக்கு அப்பாலான கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டுக்கு பாரியளவில் பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |