படுகொலை செய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்:காரில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள கைரேகைகள்
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்கள் தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
14 கைரேகைகள்
தினேஷ் ஷாப்டர் கொல்லப்படுவதற்கு சற்று முன்னர் அவரது தொலைபேசியில் வந்த சந்தேகத்திற்கிடமான பல அழைப்புகள் மூலம் கொலையாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட ஷாப்டரின் காரில் சந்தேகத்திற்கிடமான 14 கைரேகைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வர்த்தகரான தினேஸ் ஷாப்டரின் கார் எவ்வாறு பொரளை பொது மயானத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்பட்டது என்பது தொடர்பில் கொழும்பு மாநகர சபை, ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொரளை பொது மயானத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நிறுவனமாக ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை பொது மயானத்தின் பாதுகாப்பு நடவடிக்கை
இதற்கமைய கொழும்பு மாநகர சபையினால், பொரளை பொது மயானத்துக்குள் சடலங்களை எடுத்து வரும் வாகனங்களை மாத்திரம் அனுமதிக்குமாறு ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதற்கு புறம்பாக ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனம் குறித்த விடயத்தில் செயற்பட்டுள்ளதாக அதன் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
பொரளை பொது மயானத்தில் உள்நுழைவதற்காக 5 வாயில்கள் உள்ளன. எனினும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனம் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நான்கு நுழைவாயில்களில் 4 பாதுகாப்பு அதிகாரிகளை மாத்திரமே பணியில் ஈடுபடுத்தியிருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கமைய காவலாளி ஒருவர் இல்லாத நுழைவாயிலை மூடி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பொரளை பொது மயானத்துக்கு மரண சடங்குகளுக்காக வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக இரண்டு வாகன தரிப்பிடங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் கார் எவ்வாறு பொரளை பொது மயானத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தினேஸ் ஷாப்டரின் கார் சென்ற பாதை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய, தினேஸ் ஷாப்டரின் கார் காசல் வீதிக்கு அருகே உள்ள பாம் வீதி பகுதியிலுள்ள நுழைவாயிலின் ஊடாக பொரளை பொது மயானத்துக்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவ்வாறு பிரவேசித்த வாகனம் பொரளை பொது மயானத்தில் உள்ள பாழடைந்த பகுதியான வான்படையின் நினைவிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை நேற்று முன்தினம்(15.12.2022) பொரளை பொது மயானத்தில் 6 மரணங்களுக்கான இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக அங்கு பல வாகனங்கள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினேஸ் ஷாப்டரின் சடலம் இன்று காலை(17.12.2022) கொழும்பு -மலர் வீதியில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
![உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/f839fb3a-5864-4bf7-aa35-0580dcd1bbed/25-67a573453d466-sm.webp)
உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)