கொழும்பில் 9 மணிநேர நீர் வெட்டு
எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் 9 மணிநேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான குழாயான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட வேண்டியிருப்பதாலேயே நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதன்படி, காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகாலமைப்பு சபையி்ன் அறிவிப்பு
அதற்கமைய, கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |