பிரபல வர்த்தகர் மரணம்: கொந்தராத்து கொலையாளி மூலம் கொல்லப்பட்டிருக்கலாம்..! தொடரும் தீவிர விசாரணை
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் சாப்டர் கொலை தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூலம், அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
தினேஷ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையில் பணக் கொடுக்கல் வாங்கலிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு எவரிடமாவது (கொந்தராத்து) ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,