நடுத்தர மக்களுக்கு நிவாரணங்கள் இல்லை! வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடும் குற்றச்சாட்டு
அரச வருமானத்தை இலக்காகக் கொண்டே 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான எவ்வித திட்டங்களும் வரவு - செலவுத் திட்டத்தில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு கிடைத்த பயன் என்ன..
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"நிதி அமைச்சரான ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கின்றேன்.
வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி 5 மணித்தியாலங்கள் உரையாற்றினார். ஆனால், ஜனாதிபதியின் உரையில் நடுத்தர மக்களுக்கு நேரடி நிவாரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எதுவும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு முதலீடுகள் என்னவென்று பல தடவைகள் கேள்வி எழுப்பியுள்ளேன். இருப்பினும், அதற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் வழமையான போலியான வாக்குறுதிகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்குச் சாத்தியமான எந்தத் திட்டங்களையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை.
2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் எத்தனை இன்றளவில் செயற்படுத்தப்பட்டுள்ளன? மக்களுக்குக் கிடைத்த பயன் என்னவென்பதையும் அரசு அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri