இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலிய சமூக ஊடக பிரபலங்கள்: முன்னெடுக்கப்படவுள்ள மிகப்பெரும் திட்டம்
இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்கள் தொடர்பில் பிரசாரம் செய்ய இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் எதிர்பார்த்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நான்கு முன்னணி அவுஸ்திரேலிய சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்களை கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
திட்டத்தின் நோக்கம்
இலங்கையை அவுஸ்திரேலிய பயணிகளுக்கான சிறந்த நீண்ட தூர சுற்றுலா இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய அவர்களை சிகிரியா மற்றும் தலதா மாளிகை போன்ற கலாசார சின்னங்கள், எல்ல ரயில் பயணம் மற்றும் யால தேசிய பூங்கா போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், பாசிகுடா கடற்கரை மற்றும் காலி கோட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகள், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் தாமரை கோபுரம் போன்ற இடங்களை பிரசாரம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிக்க கஷெரிடின் ஃபிஷர், ஆஷ்லே பார்க்கர், செரிஸ் லில்லி மற்றும் எல்லா டெல்னோர் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்தி
இவர்கள் மூலம் முன்னெடுத்தப்படும் பிரசார நடவடிக்கைகள் இன்ஸ்டாகிராம், டிக்டோக், பேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் கூட்டாக 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும்.
இந்த பிரசாரம் உண்மையான, மாறுபட்ட மற்றும் நிலையான சுற்றுலா அனுபவங்களைத் தேடும் இளைய, அனுபவம் சார்ந்த பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகையை அதிகரிப்பதற்கான பரந்த உள்ளடக்கம் சார்ந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாகும் என்றும் இலங்கை சுற்றுலாவு மேம்பாட்டு பணியகம் கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




