ஆயிரக்கணக்கானோருடன் யாழ். வரும் அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து MV Express(Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
குறித்த கப்பல், நாளையதினம்(15.08.2025) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக நாளையதினம் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.
இரண்டு தினங்கள்
இந்தக் கப்பலில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது, கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகளும் 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வந்திருந்தது.
இவ்வாறிருக்க இந்த ஆண்டு நாளை(15) மற்றும் 22ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வருகைதரவுள்ளதாக த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




