நாமலுடன் அரசியல் டீல் செய்யும் அநுரவின் மகன்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சமிந்த விஜேசிறி
நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கும் திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மகனும் பங்குபற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு செல்லும் போது வான்பரப்பில் நாமல், அநுர குமார மற்றும் அநுரவின் மகன் ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில், நாமலை கைது செய்யும் நடவடிக்கை திட்டம் தீர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் டீல்
குறித்த திட்டம் தொடர்பில் விளக்கமளித்த அவர், சிறிலங்கன் எயார் லைன்சில் ஜனாதிபதி அநுரவின் மகனுக்கு தொழில் கொடுக்க நாமல் ராஜபக்சவே உதவி செய்துள்ளார். அந்த நன்றிக் கடனுக்காக ஜனாதிபதி மற்றும் அவருடைய மகன் மலைத்தீவு செல்லும் போது நாமலையும் அழைத்திருக்கலாம்.
கைது செய்யப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த அன்றே நாமல் மலைத்தீவு சென்றார். அவர் நாடு திரும்பிய நிலையில் கூட பொலிஸார் அவரை கைது செய்யவில்லை. அவர் விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் சென்றார். இவற்றை உற்று நோக்கினால் காரணம் புரிந்து விடும்.
அநுரவின் ஆட்சி
அதிகாரம் தம் கையை விட்டு நழுவி செல்லும் போது,நண்பர்களுக்கு அதிகாரம் கைமாறும் சந்தர்ப்பங்கள் நம் நாட்டில் நடந்துள்ளன. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிலும் போது ரணில் அவர்களை காப்பாற்றினார்.
அநுரவின் ஆட்சி ஆட்டம் காண்பது அவர்களுக்கு தென்படுகிறது.மேலும் அவர்களின் செயற்பாட்டின் பிரதி பலனும் அவ்வாறே இருக்கிறது.ஆதலால் அவர்களை காப்பாற்றக் கூடிய நண்பர்களே ராஜபக்ச குடும்பத்தினர். ஆட்சி கவிலும் போது நாமலுக்கு ஆட்சி மாற்றப்படும் போல் தோன்றுகிறது.
கடந்த வரலாறுகளில் அநுரவின் குழுவினர் பொதுஜன முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கினர்.அரசியல் டீல் ஒன்று நடப்பதாகவே நான் நினைகிறேன்.''என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




