பயங்கரவாத நிதியுதவிக்கான நடுத்தர ஆபத்துள்ள நாடாக அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கை
அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் கூடிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான நடுத்தர ஆபத்துள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தேசிய அரச சார்பற்ற நிறுவன செயலகம், மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுடன், இணைந்து இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தேசிய முயற்சிகளை முடுக்கி விடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
நடுத்தர ஆபத்துள்ள நாடு
முன்னதாக, உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இலங்கையை நடுத்தர ஆபத்துள்ள நாடாக அடையாளம் கண்டிருந்தது.
இந்தநிலையில், நேற்றைய ஒப்பந்தத்தின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நிதி நடவடிக்கை பணிக்குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி FATF என்ற நிதி நடவடிக்கை பணிக்குழு, இலங்கையால் எடுக்கப்பட வேண்டிய 42 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது, இலங்கையில் 1851 அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எனினும் 618 மாத்திரமே தற்போது செயற்படுகின்றன.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
