கோவிட் மரண உச்சத்தால் இலங்கை மிக மோசமான கட்டத்தில்!

Srilanka Covid Death
By Rakesh May 30, 2021 11:30 PM GMT
Report

இலங்கையில் கோவிட் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 53 வீதத்தால் உயர்வடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், 83 வீதமான உயிரிழப்புகள் அதிகளவில் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பரவும் கோவிட் வைரஸ் பரவல் நிலவரம் மற்றும் மரணங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் வைரஸ் பரவல் இன்னமும் மோசமான கட்டத்திலேயே உள்ளது. நாடு இரு வாரங்கள் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் ஓரளவு சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும், இந்த முடக்க காலத்துக்குள் அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் மரணங்களை பார்க்கையில் இதற்கு முன்னர் இருந்ததை விடவும் கடந்த வாரத்தில் மரணங்களில் எண்ணிக்கை 53 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

இதற்கு மக்களின் சன நெரிசல் மற்றும் சுகாதார வழிமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றாமையே காரணமாகும். ஏற்பட்ட மரணங்களில் 75 வீதமான மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

இதேவேளை, உயிரிழந்தவர்கள், தொற்றா நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US