கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை
அமெரிக்காவினால் (America) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை (Cuba) நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அநீதியான பட்டியல்
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கியூபாவின் முழு ஒத்துழைப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும். அதேநேரம் கியூபாவை நியாயமற்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இதேவேளை கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் இலங்கையின் பல்வேறு அமைப்புகள் உலகளாவிய கோரிக்கையுடன் இணைந்து கியூபாவை அநீதியான பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
மேலும், இலங்கையின் இடது ஜனநாயக முன்னணி மற்றும் இலங்கை - கியூபா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் ஆகியவையும் அமெரிக்க அரசாங்கம் கியூபாவிற்கு எதிராக கடைப்பிடித்து வரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |