மக்கள் விரும்பும் நாடாக இலங்கை: அநுர தரப்பு உறுதி
மக்கள் விரும்பும் நாடாக இலங்கையை மாற்றிக் காட்டுவோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(21.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது பல கட்சிகள் போலியான பிரச்சாரங்களை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம். வடக்கிற்கு முதலாவதாக அதிக நிதியை ஒதுக்கிய கட்சி எமது தேசிய மக்கள் சக்தி தான்.
போலியான பிரச்சாரங்கள்
அந்தக் கட்சி தமிழ் மக்களையும் கவனிக்கிறது. கடந்த காலங்களில் வெற்றி பெற்ற அமைச்சர்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் சந்திப்பதாக இருந்தால் எவ்வளவு சிரமப்பட்டிரூப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
ஆனால், இன்று அப்படி இல்லை. மிக விரைவில் உங்கள் வீடு தோறும் நாம் வருவோம். உங்கள் பிரச்சனைகளை கேட்போம். அதனை தீர்த்து வைப்போம். போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
