மக்களை அடக்க குண்டர்களை களமிறக்கிய ரணில் அரசாங்கம்! சபையில் வாசு சீற்றம்- செய்திகளின் தொகுப்பு
மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினருக்கு மேலதிகமாக அரசாங்க கட்சிகளின் குண்டர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக மக்கள் மீது அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்கு மேலதிகமாக தற்போது தமது கட்சிகளின் குண்டர்களை குழுக்களை பயன்படுத்தி சிவில் இராணுவத்தை அமைத்துக்கொண்டு செல்கிறது.
19 ஆம் திகதி திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மின் கட்டணத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது குண்டர்கள் குழு போராட்டம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
குண்டர் குழுவில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னாலேயே இந்த தாக்குதலை நடத்தினர். ஆனால் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri