மதுபானங்களின் விலை உயர்வு! கலால் திணைக்கள வருமானத்தில் வீழ்ச்சி
மதுபானத்தின் விலை அதிகரிப்பினால் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு கலால் திணைக்களத்தின் வருமானம் 20700 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களில் ஏறக்குறைய 7300 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரிசெலுத்த தவறும் நிறுவனங்கள்
இதன்படி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கலால் திணைக்கள அதிகாரிகள், மதுபானத்தின் விலை அதிகரிப்பினால் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்பார்த்த வருமானத்தை அடைய முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மதுபானத்தின் விலை அதிகரிப்பினால் மாத்திரம் வருமானம் குறையவில்லை என தெரிவித்துள்ள குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் சரியான முறையில் வரி வசூலிக்க வேண்டும் எனவும் வரிசெலுத்த தவறும் நிறுவனங்களின் உரிமத்தை இரத்து செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)