கொழும்பில் இடம்பெறவுள்ள இலங்கை விமானப்படையின் கண்காட்சி
இலங்கை விமானப்படையின் கண்காட்சி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கண்காட்சி எதிர்வரும் மே 29 முதல் ஜூன் 2 வரை கொழும்பு துறைமுக நகரத்தில் (Portcity) இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்விற்கான நுழைவுச் சீட்டு கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாவாகவும், சிறுவர்களுக்கு 100 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் உலங்கு வானூர்தி சாகசங்கள், நீர் விளையாட்டுக்கள், சாகச சவாரிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சிக்கு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் வருகை தறுமாறு இலங்கை விமானப்படை அழைப்பதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
