அடுத்தடுத்து இடம்பெற்ற கோர விபத்துகள்! இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் பரிதாபப் பலி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் காலை திருக்கோவில் - பொத்துவில் வீதியின் விநாயகபுரம் 01 பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
ஏனைய பெண்ணும் இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காலை புறக்கோட்டை - கொதட்டுவ வீதியில் கொதட்டுவ நகருக்கு அருகில் புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த பேருந்து மோதியதில் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan