அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட தம்பதியர்! இறுதியில் நடந்த சோகம்
கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம் மாலை(12) இடம்பெற்றுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
கட்டுகஸ்தோட்டை, அலதெனிய பகுதியைச் சேர்ந்த இவர்கள், மைலப்பிட்டியவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தலாத்துஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த பெண்ணின் கணவரே விபத்தில் இறந்தவரின் மனைவி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
