வாகன விபத்தில் சிக்கி ஒருவர் பலி
பேலியகொடை - புத்தளம் வீதியில் கொடவெல சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புத்தளம் - மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை - புத்தளம் வீதியில் கொடவெல சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பேலியகொடையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் வலது புறம் திரும்பும் போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
லொறியின் சாரதி கைது
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
