மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை..
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) நாளைய தினம் அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டிற்கான இறுதி மின் கட்டண மாற்றம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை வெளியிடப்பட உள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதம் உயர்த்தும் வகையில் இலங்கை மின்சாரசபை யோசனை ஒன்றை முன்மொழிந்திருந்தது.
மின்சாரக் கட்டண மாற்றம்
இந்த மாதம் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் ஆண்டின் இறுதி காலாண்டுக்காக இந்த கட்டணத் திருத்தத்தை மின்சாரசபை முன்மொழிந்திருந்தது.
இந்த முன்மொழிவைச் சார்ந்த பொது கருத்து சேகரிப்பு கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கப்பட்டு, இறுதி அமர்வு அக்டோபர் 8ஆம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது.
அந்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டண மாற்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்.
சுயாதீன தொழிற்சங்கம் எச்சரிக்கை
இந்த ஆண்டின் மூன்றாவது மின் கட்டண மாற்றத்தைச் சார்ந்த கருத்து சேகரிப்பு அமர்வுகளில் சுமார் 500 பேர் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.
இதற்கிடையில், மின்சார சபையின் மறுசீரமைப்பு முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வை தடுக்க முடியாது என இலங்கை மின்சாரசபை சுயாதீன தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன், தங்களது சங்கம் தற்போது மின்சாரசபை மறுசீரமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
