இலங்கையின் நிதி நிலை குறித்து Fitch வெளியிட்டுள்ள கணிப்பு
இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதி ஒழுக்கத்தையும் அரசாங்கக் கடனைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதைக் காட்டுவதாக Fitch Ratings தெரிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.3வீத முதன்மை நிதி உபரியை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
இது 2026ஆம் ஆண்டின் மதிப்பிடப்பட்ட 3.6வீதத்தை விடக் குறைவாகும்.
பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டமைப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை GDPயில் 4.5வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026இல் இது 3.7வீதமாக இருந்தது. டித்வா பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டமைப்பு மற்றும் பொதுமுதலீட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் அரசாங்கச் செலவுகள் உயர்ந்துள்ளன.

இந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அரச வருமானம் GDPயில் 15.8வீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்ட இலக்குகளுடன் பெருமளவில் இணைந்துள்ளதாக Fitch தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசக் கடன் 2022இல் GDPயில் 115வீதமாக இருந்த நிலையில், 2026இல் சுமார் 92வீதமாக குறையும் என Fitch எதிர்பார்க்கிறது. இருப்பினும், கடன் சுமையும் வட்டி செலுத்தும் சுமையும் இன்னும் அதிகமாகவே உள்ளதாக Fitch எச்சரித்துள்ளது.