புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(18.08.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழாவில் பெருமளவான பக்த அடியவர்கள் கலந்து கொண்டு, எம்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
கொடியேற்றத்துடன் ஆரம்பம்
கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா பதினொரு தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதன்படி, 23.08.2026 அன்று மாம்பழத் திருவிழாவும், 24.08.2026 அன்று வேட்டைத்திருவிழாவும், 25.08.2026 அன்று சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 26.08.2026 அன்று மகா தேர்த்திருவிழாவும், 27.08.2026 அன்று தீர்த்தத் திருவிழாவும், 28.08.2026 அன்று பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 21 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam