இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு எதிர்ப்பு
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துவதாக பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சமூக செயல்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (03.02.2026) உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணம்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற எந்தப் பேதமும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இலங்கை அரசாங்கம் வழங்கும் இலவசக் கல்வி வசதிகளை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலி பினாமி அமைப்புகள் அனுப்பும் பணத்திற்காகவே கறுப்பு தின நாடகத்தை இவர்கள் நடத்துகின்றார்கள்.
இவ்வளவு ரோசம் இருக்குமெனில் இலங்கை அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, இந்த நாடு வழங்கும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மறுதலித்துவிட்டு போராட வேண்டும்.
அதனைச் செய்யாமல் வெளிநாட்டு பணத்திற்காக தேச விரோத செயல்களில் ஈடுபடும் இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1974 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தை கட்டி முடித்து திறந்து வைக்க அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க வருகை தந்த போதும் இதேபோன்று கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் வேண்டாம் எனக் கூறி இரண்டு நாட்கள் ஹர்த்தால் நடத்தப்பட்டது.
அந்த எதிர்ப்புகளையும் மீறித்தான் இன்றைக்கு இவர்கள் குற்றம் சாட்டும் அதே சிங்கள அரசுகள் எமக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தந்தன.
சுதந்திர தினம்
இன்று அந்த பல்கலைக்கழகத்தில், இலங்கை அரசு வழங்கும் இலவசக் கல்வியை அனுபவித்துக் கொண்டு, வெட்கமே இல்லாமல் கறுப்பு கொடி ஏற்ற சில பிழைப்புவாதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் முன்வந்துள்ளனர்.
இவர்களின் இந்த சண்டித்தனங்களுக்கும் சேட்டைகளுக்கும் அடிபணியாமல் வடக்கு வாழ் தமிழ் மக்கள் தமது வீடுகள் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், எவரேனும் சண்டித்தனமாக கடைகளை பூட்டுமாறு மிரட்டல் விடுத்தால் மக்கள் எம்மை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறையில் அடைக்க தேவையான உதவிகளை நாம் வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam