சவாரி விடந்தை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து சிறிதரன் ஆராய்வு (Photos)
கிளிநொச்சி - சோலைநகரில் நீண்ட காலமாக இருந்து வந்த சவாரி விடந்தையை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆராய்ந்துள்ளார்.
அப்பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குறித்த விடந்தை அமைந்திருந்த பகுதிக்கு நேற்று சென்ற அவர் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
வனவளத்திணைக்களத்தினர் எல்லையிடல்
உருத்திரபுரம், சிவநகர், சோலைநகர் , ஊற்றுப்புலம், புது முறிப்பு உட்படப் பல கிராமங்களில் வசிப்பவர்களால் பல ஆண்டுகளாக இயங்கி வந்த விடந்தைக்குள் திடீரென வனவளத்திணைக்களம் எல்லையிட்டிருப்பதால் பாரம்பரியமாக நடைபெற்று வந்த சவாரிப் போட்டிகள் போன்றவை நடத்த முடியாமல் இருப்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய
குழு உறுப்பினர் ஜெயக்குமார், புதுமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின்
தலைவரும் புதுமுறிப்பு தமிழரசுக் கட்சியின் அமைப்பாளருமான தங்கராசா
உள்ளிட்ட கிராமங்களின் பொதுஅமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து
கொண்டனர்.










பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
