சீன கப்பல் விவகாரம் - தடுமாறும் இலங்கை! இந்தியாவிடமிருந்து கிடைக்கும் உளவு விமானம்
இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கையின் படைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நாளைய தினம் வரவிருந்த சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.
டோர்னியர்-228 உளவு விமானம்

பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் மின்னணுப் போர்ப் பணிகள், கடல்சார் கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் பிற பணிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த உளவு விமானத்தை, இலங்கை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri