இல்ல விளையாட்டு போட்டி விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை (Jaffna - Tellippalai) யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதன்படி நாளை 5ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
பொலிஸார் சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்ததுடன் அதிபர், ஆசிாியர்கள், மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்காக பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிாியா் சங்கம் மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
எனவே, குறித்த முறைப்பாட்டிற்கமைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |