பாரியளவு போதைப்பொருளுடன் சிஐடியிடம் சிக்கிய ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகா
வத்தளை - மாபோலப் பகுதியில் 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
முக்கிய குற்றவாளி..
இதன்போது, 9.229 கிலோகிராம் ஐஸ் மற்றும் 9.264 கிலோகிராம் ஹெரோயின் (மொத்தம் சுமார் 18 கிலோகிராம் போதைப்பொருள்) ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் மொரில் (Moril) எனும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை நாட்டிற்குள் விநியோகிக்கும் முக்கிய விநியோகஸ்தராக இவர் செயல்பட்டு வந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்