ஒரே நாளில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி மற்றும் நாமல்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும், அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்ட 'சிறிலியா சவிய' (Siriliya Saviya) என்ற தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்சவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாமல் ராஜபக்சவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாமல் ராஜபக்சவும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்சவும் 13ஆம் திகதியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.