பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் தொழுநோய்
இலங்கையில் வேகமாக தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் பிரசார பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரப் பிரிவின் தகவல்படி, மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட, நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்தே எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் தகவல்படி, 95 சதவீத மனிதர்களில் தொழுநோயை ஏற்படுத்துவதற்கு பக்டீரியாக்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டு வகையாக தொழுநோய் பரவுகிறது, அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை. துரதிர்ஷ்டவசமாக, இதுவரை கண்டறியப்பட்ட தொழுநோயில் 60 சதவீதமானவை தொற்றக்கூடியவை.
இது கவலை தரும் செய்தி என ரணவீர கூறினார் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 170க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் மொத்தமாக இதுவரை 500 நோயாளிகள்
கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச்
சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 பேரும், கம்பஹாவில் 114 பேரும்,
களுத்துறை மாவட்டத்தில் 82 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri