போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக! ஜனாதிபதி உத்தரவு
இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(7.5.2026) நடைபெற்ற "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் குழப்பம்! முக்கிய அதிகாரிகள் தீவிர விசாரணை - பொலிஸார் வெளியிட்ட தகவல்
சுற்றிவளைப்புகள்
அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக என்ற செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam