விரைவில் விசேட வர்த்தமானியை வெளியிட தீர்மானம்
வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதி விபத்துகள்
இந்த ஆண்டும் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, இந்த நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
அத்துடன், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது.
மேலும், பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்பு கழகங்களை (Road Safety Club) நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேக கட்டுப்பாடுகள் தொடர்பான தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |