கறுப்பு ஜுலை ஒரு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்: ரெலோ தலைமைக்குழு

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer Jul 29, 2024 12:38 PM GMT
Report

கறுப்பு ஜுலையானது தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறை என ரெலோ தலைமைக்குழுவின் உறுப்பினர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். 

தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், 

"கறுப்பு ஜுலையானது தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். 

கோர விபத்தில் தாய் மரணம் - உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

கோர விபத்தில் தாய் மரணம் - உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

இனக்கலவரங்கள் 

இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமை பொறிமுறையை உறுதிப்படுத்தாமையினால் தமிழ்மக்கள் ஆகிய நாம் உள்நாட்டில் மனக்கசப்புடனும் அதிருப்தியுடனும் அடக்குமுறையை சகித்தே வாழ்கின்றோம்.

கறுப்பு ஜுலை ஒரு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்: ரெலோ தலைமைக்குழு | Speech About Black July

இலங்கையில் பல இனக்கலவரங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் கறுப்பு ஜுலை இனக்கலவரம் சர்வதேச கவனத்தினை ஈர்த்ததாகக் காணப்பட்டது. அது முமையாக அரச திட்டமிடலிலேயே இடம்பெற்றது.

அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காணப்பட்ட வெலிக்கடைச் சிறைக்குள் எமது இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தலைவர்களை நாம் ஆகுதி ஆக்கியுள்ளோம்.

அவர்கள் போன்ற செயல்வீரமும் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க தலைவர்களை எமது கட்சி மாத்திரம் இழக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியமே இழப்பினைச் சந்தித்தது.

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுப்பு

சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுப்பு

அழிக்கப்பட்ட தமிழர்கள் 

தமது மரணத்தில் தம் கண்களை கொடையளித்து தமது கண்கள் மலரும் விடுதலை பெற்ற தாயகத்தை காணும் என கனவு கண்ட தலைவர்கள் கண்கள் பிடுங்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

கறுப்பு ஜுலை ஒரு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்: ரெலோ தலைமைக்குழு | Speech About Black July

இவ்வாறாக தலைவர்கள் உள்ளிட்ட 53 பேரை அரச அனுசரணையில் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர். வன்முறைகள் வாயிலாக டயர்கள் போட்டு எரித்து மூவாயிரம் தமிழர்களை அழித்தனர்.

25ஆயிரம் பேரை காயப்படுத்தினர். 50ஆயிரம் பேரை உள்நாட்டில் சொத்துக்களை சூறையாடியும் கொன்றும் இடம்பெயர்ந்தோர் ஆக்கினர். இந்தச் சம்பவங்கள் அரசின் உயர்மட்ட திட்டமிடலிலேயே நடந்தன.

அதற்கு உதாரணமாக, வன்முறைக்கு இரு வாரங்களுக்கு முன் (193 ஜுலை 11) லண்டனைத் தளமாகக் கொண்ட  பத்திரிகை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசுத்தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, தமிழ் மக்கள் விடயத்தில் தமக்குக் கவனம் கிடையாது.

கறுப்பு ஜுலை ஒரு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்: ரெலோ தலைமைக்குழு | Speech About Black July

அவர்களுக்கு எது நடந்தாலும் சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்று அரச பொறுப்புணர்வுத் துறப்பினை வெளிப்படுத்தினார்.

நடந்த சம்பவங்களை கண்காணிப்புக்கு உட்படுத்திய பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் (International Commission of Jurists - ICJ) நடைபெற்றவற்றை இனப்படுகொலை என சுட்டிக்காட்டியது.

இவ்வாறாக உள்நாட்டிலேயே எண்ணற்ற அநியாயங்களை எதர்கொண்டவர்களாக அவற்றுக்கான நீதிக்கு பல தசாப்தங்கள் கடந்தும் கிடைக்கப்பெறாது போராடும் ஓர் இனமாக நாம் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்தம்” என குறிப்பிட்டுள்ளார். 

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US