கோர விபத்தில் தாய் மரணம் - உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்
குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ள மேலும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 பிள்ளைகளும் தாயாரின் உழைப்பிலேயே வாழ்த்து வந்துள்ளனர்.
பொல்பித்திகம, பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதான எச்.எச். நிரோஷா தமயந்தி, என்ற இந்த பெண், ஆடை தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
வீதி விபத்து
நேற்று காலை 7.30 மணியளவில் பணிக்கு செல்லும் போது, அவர் விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவருடன் பணிபுரிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பொல்பித்திகம நோக்கி சென்ற பாரவூர்தியின் சாரதி உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து பிரதான வீதியை நோக்கி சென்று மூவர் மீது மோதியுள்ளது.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து, பாரவூர்தியை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
