யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம்!

By Theepan Mar 26, 2023 12:28 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று (26.03.2023) யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவும் இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த வருமானம் பெறுகின்ற வறுமைக்குள் உள்ளாகி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக ஜனாதிபதியின் யோசனைகளுக்கு அமைய இந்த திட்டம் நடைபெற்று வருகின்றது.

யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம்! | Special Work Plan To Prevent Crime In Jaffna

நாங்கள் வாழ வேண்டும்

இந்த நாட்டு விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்து அந்த நெல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற குடும்பங்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் அவற்றைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு அமைய அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசாங்க அதிபர்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைந்திருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்து அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெட்டயர் வயல் நிலம் இருக்கின்ற போதும் எங்களுக்கு 300 ஹெட்டயர் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என எதிர்பார்த்து இருந்தோம்.

ஆனால் எங்களுக்கு 25 ஹெட்டயர் நெல்லை கூட கொள்வனவு செய்ய முடியாது போயிருந்தது. அதனால் நாங்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு அமைய தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அரிசி கிடைக்கப்பெற்று இருக்கிறது.

இதன் மிகுதித்தொகை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைக்க இருக்கின்றது. தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளை வழங்கித்தான் நாங்கள் வாழ வேண்டும் என்கின்ற நிலை இருக்கக்கூடாது நாங்கள் என்னென்ன தொழிலை மேற்கொள்ளுகின்றோமோ அவற்றுள் மிகச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே என்ற அடிப்படையில் குடும்பங்களைத் தெரிவு செய்து இருந்தாலும் எங்களுடைய ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்ற செலவினங்களைப் பார்த்தால் நாங்கள் அந்த வறுமையிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என நான் நம்புகின்றேன்.

யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம்! | Special Work Plan To Prevent Crime In Jaffna

பல்வேறு சவால்கள்

இங்கிருக்கின்ற அநேகமானவர்களிடம் கைதொலைப்பேசி இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கைத்தொலைபேசி இருக்கும் அந்த கைத்தொலைபேசிக்கு மாதாமாதம் செலவழிக்கின்ற காசு எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தோமாக இருந்தால் அதில் 50சதவீதம் சேமிக்க முடியுமாக இருந்தால் எங்களுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்க முடியும்.

இவ்வாறு பல அனாவசியமான செலவுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எங்களுடைய நாடு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றது. நாங்கள் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தினுடைய கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களிடத்தில் என்ன வளங்கள் இருக்கிறதோ அந்த வளங்களை மிக உச்ச அளவில் பயன்படுத்தி முதலில் எங்களுடைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

அரசாங்கம் அதைத் தரவில்லை இதைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டுதை மட்டும் வாசகமாக வைத்திருப்பதைத் தவிர்த்து அரசாங்கத்தினுடைய உதவிகளோடு நீங்களும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டமும் ஒரு சிறப்பான திட்டம் விலைவாசிகள் காரணமாக பயிற்செய்கைக்கு தேவையான பசளை விதைநெல் ஏனைய கூலிகள் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற போது, காலநிலையும் விவசாயிகளுக்குப் பாதகமான சூழ்நிலையில் காணப்படுகின்றது. அவர்கள் மிகக் கஷ்டப்பட்டு இந்த நெல்லை உற்பத்தி செய்து அதைக் காய வைக்கின்ற நேரத்தில் கூட மழை பெய்து அதை அழிக்கின்ற நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே தங்களுடைய உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிகள் தங்களுக்குரிய சரியான விலை கிடைக்காமையினால் அவதிப்பட்ட வண்ணம் இருந்தார்கள் இதனால் அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருந்தது 88 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் நெல் உடையத் தரத்துக்கு அமைவாக அதனைக் கொள்வனவு செய்வதாக அறிவித்தது.

யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம்! | Special Work Plan To Prevent Crime In Jaffna

வறுமை

இந்த நெல் கொள்வனவினை அந்த அந்த மாவட்டங்களில் இருக்கின்ற அரசாங்க அதிபர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும் எனவும், ஏனெனில் அதிலும் கருப்பு சந்தைக்காரர்களுடைய தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக. 

இதில் இரண்டு விதமான நன்மைகள் இருக்கின்றது ஒன்று விவசாயிகள் தங்களுடைய நெல்லுக்கு போதிய விலையைப் பெற்றுக் கொள்ளுதல், அதேவேளை தற்காலிகமாக வறுமைக்கு உட்பட்டிருக்கின்ற பொதுமக்கள் தங்களுடைய சிக்கலைத் தவிப்பதற்கு ஒரு தற்காலிக ஏற்பாடு கிடைக்கின்றது.

இன்றைக்கு எங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய இளம் சமுதாயம் பற்றி தென்பகுதியில் இருக்கின்ற நண்பர்கள் கதைக்கின்ற போது வியப்பாகவும் கவலையாகவும் கேட்கின்றார்கள் யாழ். மாவட்டம் அவ்வளவு மோசமாகப் போய்விட்டது. நாட்டில் இருக்கின்ற தேசிய பத்திரிகைகள் எதனை எடுத்தாலும் யாழ். மாவட்டத்தின் குற்றச்செயல்கள் தொடர்புடைய செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன, இங்கிருக்கின்ற பெற்றோர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எங்கே செல்கின்றார்கள், என்ன செலவு செய்கின்றார்கள், எங்கிருந்து காசு வருகின்றது போன்ற விடயங்களைக் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல உங்களுடைய கிராமம் மட்டுமல்ல இந்த நாடு சீரழிந்து போகின்ற நிலைமை ஏற்படும்.

நாங்கள் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினரோடு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா இது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார்.

அது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று மிக விரைவில் நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த குற்றச் செயல்களை எவ்வாறு தடுப்பது, இதில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுபவர்களை எவ்வாறு இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக வேலைத் திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம்! | Special Work Plan To Prevent Crime In Jaffna

கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும்

இவ்வாறான நிலைமைகளை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாக இருந்தால் இயல்பாகவே எங்களுடைய கிராமங்களிலே, எங்களுடைய நகரங்களிலே குற்றச் செயல்கள் குறையும். இந்த மாவட்டத்தினுடைய கௌரவம் காப்பாற்றப்படும் யாழ்ப்பாண மண்ணுக்குரிய கௌரவமும் பெருமையும் மதிப்பும் பேணப்படும் உங்களுடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும். ஆனபடியால் உங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். என்னிடம் நேற்றைய தினம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள்.

வறுமையில் வாடுகின்ற குடும்பங்களிலிருந்து தான் போதைவஸ்து பாவிப்பவர்கள் வருகின்றார்களாக இருந்தால் அவர்களுடைய குடும்பத்தைப் போய் பார்த்தால் அங்கே வறுமையாக இருக்கின்றது. அத்துடன், அங்கே வசிப்பதற்குக் கூட போதிய இடம் இல்லாமல் இருக்கின்றார்கள் எனச் சொல்லுகின்றார்கள். ஒருவேளை உணவுக்குக் கஷ்டப்படுகின்றார்கள் எனச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் ஒருநாள் போதைவஸ்து பாவிப்பதற்கு 15,000 வரைக்கும் அந்த குடும்பத்தவர்கள் செலவழிக்கின்றார்களாக இருந்தால் அந்தக் பணம் எங்கிருந்து வருகின்றது இது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை இதற்குப் பின்னால் இருக்கின்ற ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறீர்கள்.

அவ்வாறானால் அந்த குடும்பம் வறுமையான குடும்பமா? அந்தப் பையனுக்கு அல்லது அந்த பெண்ணுக்கோ எங்கிருந்து காசு கிடைக்கிறது இவை போன்ற கேள்வியை நீங்கள் எழுப்ப வேண்டும் இதில் மிகக் கவனம் செலுத்த வேண்டும். இது சம்பந்தமாக உரியத் தகவல்களை உரியத் தரப்பினருக்கு வழங்க வேண்டும் உங்களுடைய பிரதேசங்களில் இவ்வாறான குற்றச் செயல்களை ஈடுபடுபவர்களை நீங்கள் இனம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

உங்களுடைய கிராம உத்தியோகஸ்தர் இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஆகக்குறைந்தது அவர்களுக்காவது அல்லது பொலிஸாருக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அல்லது சமூக சேவை உத்தியோகத்திற்கு யாருக்காவது இந்த தகவல்களைத் தெரிவித்து உங்களுடைய கிராமங்களில் இந்த குற்றங்களை செய்பவர்கள் வராதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான, சிறந்த சமுதாயத்தில் உள்ளவராக நீங்கள் மாற முடியும் என இவ்விடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், வவுனியா

07 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, நொச்சிமோட்டை, Montreal, Canada, Toronto, Canada, Mississauga, Canada

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

30 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு கொச்சிக்கடை, Toronto, Canada

05 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நல்லூர், கனடா, Canada

09 May, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Muscat, Oman, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, கண்ணாட்டி,, இலுப்பைக்கடவை, London, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வைரவபுளியங்குளம்

27 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US