அர்ச்சுனாவை காப்பாற்ற நான் தயார்..! யாழ். மக்களிடம் பகிரங்க கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் சரிச் செய்கிறேன் என யாழ்ப்பாண மக்களிடம் ஈரோஸ் கட்சித் தலைவர் இரா. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(18.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்து மக்கள் அவர்களுடைய எதிர்காலத்திற்கு ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனாவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அர்ச்சுனா வெளிநாடுளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்சர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பைத்தியம் முற்றி விட்டது, நாய்களை பிடித்துக் கொண்டுச் செல்லும் வண்டியில் சரி, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் வைத்தியம் பார்க்க வேண்டும். இல்லாவிடின் அர்ச்சுனாவின் எதிர்காலமே வீணாகி விடும்.
அதுமட்டுமன்றி, அவருக்கு அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும், எனெனின், அவர், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்த மிகவும் மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.